அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கவில்லை - அமைச்சர் கெஹலிய - Sri Lanka Muslim

அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கவில்லை – அமைச்சர் கெஹலிய

Contributors

இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தற்பொழுது ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இணையவழி தொழில்நுட்பத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திப்போடப்பட்டது.

இதனால் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team