அவசரமான நிவாரண உதவிகளை முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் » Sri Lanka Muslim

அவசரமான நிவாரண உதவிகளை முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் ஊடாகவும் மேற்கொள்ள முடியும்

haleem1

Contributors
author image

இக்பால் அலி

அம்பாறையிலும் மற்றும் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும்  வன்முறையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் யாவும் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதேவேளையில் அவசரமான நிவாரண உதவிகளை முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் ஊடாகவும் மேற்கொள்ள முடியும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஆர், எம். மலீக் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கண்டி மாவட்டத்தில்  மேற்கொள்ளப்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகிவுள்ள மக்களுக்கு முஸ்லிம் பிரதேசமெங்கும் பொருளாகவும் பணமாகவும் சேகரித்து மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவை தனிப்பட்ட ரீதியாகவும் ஊர் ஜமாஅத் ரீதியாகவும்  நிறுவனங்கள ரீதியாகவும் இந்த மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்  சகோதரர்களுக்கு உதவி புரிவது கட்டாயக் கடமையாகும்.

எனினும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அடிப்படையில் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட அந்தந்த பிரதேச செயலகம் ஊடாக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம்.  பொதுவாக பாதிக்கப்பட்ட எல்லா முஸ்லிம் மக்களும்; மனம் நோகாமல் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான பணிகளையே  நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

இன்று  பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுடைய சேத விபரங்கள் பதிவு செய்யும் பணிகள் கண்டி மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் தலைமையில் நடைபெறுகின்றது. பாதிப்புக்குள்ளான பள்ளிவாசல்களிலிருந்து நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த பள்ளிவாசல் தொடர்பாக பதிவு செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஒரு வார காலமாக உணவு வசதியின்றி வீடுகளிலும் அகதி முகாம்களில் முஸ்லிம்கள் முடங்கி வாழ்கின்றார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள்  தொழிலை இழந்துள்ளனர்.   அன்றாடம்  கடைகளுக்குச் சென்று கூலித்தொழில் செய்து வந்தவர்களின் வாழ்க்கை  முற்றாக அடிபட்டு நிர்க்கதியாகி உள்ளார்கள். வீடு வாசல்கள் ; இழந்து வேறு இடங்களிலும் குடுபத்தவர்கள் வீடுகளிலும் பலர் வசிக்கின்றார்கள். இவ்வாறு பல்வேறு  வகையில் இழப்புக்களை  எதிர்நோக்கியுள்ளனர்.  இந்த மக்களுடைய மீள் நிவாரண உதவிகளை  முஸ்லிம் சமயம் கலாசார திணைக்களத்தின் சகாய நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஆதலால் மனிதாபிமான உதவிகளைப் புரிய விரும்புபவர்கள் ஒரு  ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன ரீதியாக செயற்படவுள்ள  சகாய நிதியத்திற்கு   உதவிகளை வழங்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாக பணிப்பாளர்  தெரிவித்தார்.

இந்த உதவிகளை எமது அலுவலகத்திற்கு நேரடியாக  வந்து ஒப்படைக்கவும் முடியும்.  அல்லது நிதி உதவிகளைச் செய்ய விரும்புவோர்கள் எமது வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு பண வைப்பில் இடவும் முடியும் என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

எம். சி. எப். ( MCF), கணக்கு இலக்கம் 2327588, மக்கள் வங்கி
மேதிலக விபரங்களுக்கு 0112669997 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

12-03-2018

Web Design by The Design Lanka