அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் பலி,மூவர் காயம்! - Sri Lanka Muslim

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்-ஒருவர் பலி,மூவர் காயம்!

Contributors

அவிசாவளை – மாதொல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள இரும்பு உருக்கு நிலையமொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிவாயு சிலிண்டர் வெடிப்பே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என தெரிவிக்கின்ற பொலிஸார், சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team