அவுஸ்திரேலியா கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதி » Sri Lanka Muslim

அவுஸ்திரேலியா கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுதி

aus

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிழக்கின் சுற்றுலாத்துறையை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று பங்கே ற்றார்,

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் மற்றும் திறன் அபிவிருத்தி,தொழிற் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் ஆகியோரும் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான தொழிற்திறன் திட்டத்தினை ஜனாதிபதி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் கிழக்கின் அம்பாறை ,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு இளைஞர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமையளித்து பல அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பிரதான பிரச்சினையாக காணப்படும் வேலையில்லாப் பிரச்சினையை முற்றாக ஒழிக்கும் ஒரு திட்டத்தில் ஒரு கட்டமாக இந்த திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது,

இதில் சுற்றுலாத்துறையின் பெறுமானம்கொண்ட சகல பிரிவுகளும் நன்மையடையவுள்ளதுடன் இதில் உணவுப் பொருள் விநியோகத்தர்கள்,கலைஞர்கள்,விருந்துபசார பயிற்சியாளர்கள்,வதிவிட வழங்குநர்கள்,வாடகை வாகன சாரதிகள் ,மாவட்ட திட்டமிடலாளர்கள்,பூங்கா காப்பாளர்கள்,கைத்தொழில் ஒருங்கிணைப்பாளர்கள் வர்த்தக சம்மேளனத்தினர் ஆகியோர் இதன் மூலம் பாரிய நன்மையடைவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

இலங்கையின் ஒ ளிமயமான எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன் கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் கிழக்கு முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்

Web Design by The Design Lanka