அவ்வாறானதொரு தீர்மானத்துக்கு ரணில் போனால் முஸ்லீம் தலைவர்களால் என்ன பேச முடியும்? » Sri Lanka Muslim

அவ்வாறானதொரு தீர்மானத்துக்கு ரணில் போனால் முஸ்லீம் தலைவர்களால் என்ன பேச முடியும்?

ranil

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்மி அப்துல் கபூர்


ரணிலினுடைய ஆட்சி தந்திரமாக நகர்த்தப்படுவதும், மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி அவர்களது அரசியல் நகர்வை முன்னெடுப்பது வழமையானது.

இதற்க்கு உதாரணமாக 2002 ம் மாண்டு சமாதான உடன் படிக்கை காலம் முஸ்லீம்களை அடகு வைத்து தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததை குறிப்பிடலாம்.

அதன் பின்னர் கணக்குகள் போட்டு ஞானசாரவை வைத்து ராஜித, சம்பிக, போன்றவர்களின் துணையோடு முஸ்லீம் சமுகத்தை அச்சமூட்டி ஆட்சியை மாற்றினார்.

இ்ன்று 20வது சீர்திருத்தை கொண்டு வந்து அதன் சூட்டில் – கண்ணை மறைத்து மாகாணசபை சட்ட மூலத்தை இரவோடிரவாக நிறைவேற்றினார்.

சுதந்திர கட்சியோ, ஜனாதிபதியோ வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உடன்படாத பட்சத்தில் மைதிரி பால சிறி சேனாவுக்கும் மகிந்தவுக்குமான இணைவின் கதவகள் எல்லாவற்றையும் மூடி மைதிரி பால சிறி சேனா அவர்களுக்கும்,சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சர்வஜன வக்கெடுப்பொன்றின் மூலம் பாராளுமன்றத்தை நீடித்து பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும் பொறி முறை ஒன்றுக்குள் ரணில் ஜயம்பதி, சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதியிடம் அனுப்பி இருக்கிறார்.

அதற்க்காக மக்களை உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தப் போவதாக பூச்சாண்டிகாட்டி வருகிறார்கள்.
திடீரென அவ்வாறானதொரு தீர்மானத்துக்கு ரணில் போனால் முஸ்லீம் தலைவர்களால் என்ன பேச முடியும்?

மக்களை எவ்வாறு வழி நடாத்த போகிறார்கள்.

ஹக்கீமுக்கு இன்னும் பல மில்லியன்களால் பொட்டி நிரம்ப போகிறது,
வேறு என்ன நிகழும்.

இடைக்கிடையில் ஞானசாரவை அனுப்பி எம்மை ஓரளவு ஓரளவுக்கு அச்சமூட்டி சமுகத்தை வேறு திசையும் நோக்கி இலகுவாக முஸ்லீம்களின் கவனத்தையும் திசை திருப்பி விடுவார்கள்.

கரையோர மாவட்டம் எனும் அரச பணியாளரான அரசாங்க அதிபர் பெறுவதற்காக, அல்லது பெற்றெடுக்க போகிறோாம் என்பதற்காக கிழக்கில் இருக்கும் அரசியல்
அதிகாரத்துவத்தை இழந்து விடப் போகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இவ்வாறான விடயங்களையூம், சூழ்ச்சிகளையும் முறியடிக்க கட்சி பேதமின்றி களப் பணியாற்றுவோம்.வாருங்கள்.

Web Design by The Design Lanka