அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியாரின் ஜனாஸா நாளை தெல்ஹொட மையவாடியில் நல்லடக்கம் » Sri Lanka Muslim

அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியாரின் ஜனாஸா நாளை தெல்ஹொட மையவாடியில் நல்லடக்கம்

janaza

Contributors
author image

A.S.M. Javid

ஜமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியார் இன்று (30) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார். 48 வயதுடைய திருமதி சுரையா மூன்று பிள்ளைகளின் தாயாவார்

நுவரெலியாவிலிருந்து ஹிங்குல்ல வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் ஹெலிஓயா வெலிஹல்ல எனும் இடத்தில் வாகன விபத்து இடம் பெற்று கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வபாத்தனார்.

ஜனாஸா நாளை ஹிங்குல்ல எனும் இடத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தெல்ஹொட முஸ்லிம் மையவாடியில் (31) நாளை நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் ஊடகவியலாளர் சி.எம்.ஏ.அமீனின் சகோதரியும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீனின் நெருங்கிய குடும்ப உறுப்பினருமாவார்.

Web Design by The Design Lanka