அஷ்ஷைக் யூசுப் நஜ்முதீன் காலமானார்..! » Sri Lanka Muslim

அஷ்ஷைக் யூசுப் நஜ்முதீன் காலமானார்..!

Contributors
author image

Editorial Team

சில்மியாபுரையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அஷ் ஷைக் யூஸுப் நஜ்முதீன் அவர்கள் நேற்று இரவு (2021.02.16) கலமானார்கள். ,அன்னார், அகில இலங்கை கதீப்மார் சம்மேளனத்தின் முன்னாள் கௌரவ பொதுச் செயலாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஆவார்.

கொழும்பு, பேருவளை போன்ற பல பிரதேசங்களில் இமாமாகவும் கதீபாகவும் கடமையாற்றியதுடன், கொழும்பில் திருமணப் பதிவாளராகவும் சேவையாற்றினார், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் நீண்டகால உறவைப் பேணிவந்ததுடன், அதன் வளர்ச்சியில் பாரிய பங்காற்றியவர்.

அஞ்சா நெஞ்சம் கொண்ட அவர், முகத்துக்கு முகம் எதனையும் பேசித் தெளிவடைந்து கொள்வார். தனது வாழ்நாளில் மிகப் பெரும் பகுதியை முஸ்லிம் சமூகத்துக்காகவே செலவிட்டார். சமூக சேவை புரிவதில் மிகுந்த உளத்திருப்தியும் மகிழ்வும் கொள்வார். நீண்டகாலம் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு இறையடி சோர்ந்து, நடுநிசியில் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியியல் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அல்லாஹ் அவரது அனைத்து நற்கருமங்களையும் அங்கீகரித்து, அவரது தவறுகளை மன்னித்து ஜன்னத்தல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் குடியமர்த்துவானாக! அன்னாரது இழப்பினால் துயர் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், நண்பர்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக!

அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

Web Design by The Design Lanka