அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி குருதி உறைவை ஏற்படுத்துமா? - WHO ஆராய்கிறது - மிகச் சிறந்ததென நிபுணர்குழு பரிந்துரை - Sri Lanka Muslim

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி குருதி உறைவை ஏற்படுத்துமா? – WHO ஆராய்கிறது – மிகச் சிறந்ததென நிபுணர்குழு பரிந்துரை

Contributors

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை உலக நாடுகள் சில இடைநிறுத்தியுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இத்தடுப்பூசியை பெற்ற சிலர் குருதி உறைவு நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே தடுப்பூசியை தடை செய்ய காரணம் எனவும் ஐரோப்பிய நாடுகள் சில தெரிவித்துள்ளன.

இந்த தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் ஆலோசனை குழுவின் பேச்சாளர் கூறியதாவது, அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி மிகச்சிறந்ததென்பதோடு, அந்த தடுப்பு மருந்தை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அஸ்ட்ரா செனேகாவின் தடுப்பூசி குறித்து அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள் கரிசனை எதனையும் வெளியிடவில்லையென பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார திணைக்களத்தின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ரா செனேகாவை பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team