அஸ்ஸஹீத் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகர்த்த இறுதிப்போட்டி (video) » Sri Lanka Muslim

அஸ்ஸஹீத் தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் ஞாபகர்த்த இறுதிப்போட்டி (video)

al

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ  

ஏறாவூர் இளம் தாரகை (Young Star Sports Club) இன் 45வது ஆண்டு நிறைவையொட்டி அஸ்ஸஹீத்களான தாவூத் சேர் மற்றும் புஹாரி விதானையார் ஞாபகார்த்த கிழக்கு மாகாண ரீதியாக 32 அணிகளை இணைத்து நடாத்திய மாரும் உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது நேற்று 19.05.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏறாவூர் ஆற்றக்கரை மைதானதில் பல்லாயிரக்கணக்கான உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

இறுதி போட்டியில் மட்டக்களப்பு கோப்றா அணியினரும் சாம்பியனாக மருதமுனை ஒலிம்பிக் அணியினரும் பலப்பரீட்ச்சை நடத்தியில் மருதமுனை ஒலிம்பிக் ஒன்றுக்கு பூச்சியம் எனும் கணக்கில் வெற்றியீட்டி அஸ்ஸஹீத்த் தாவூத் & புஹாரி விதானையார் ஞாபகர்த்த சவால் மற்றும் வெற்றிக்கிண்ணங்கலை கைப்பற்றிக்கொண்டது.

சாட்டோ வை.எல்.மன்சூரின் பூரண அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த குறித்த உதைப்பந்தா சுற்றுப்போட்டிகளின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபையின் முதல்வர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் கலந்து கொண்டதுன் விஷேட அதீதிகளாக இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலான, பிரதேசத்தில் உள்ள கல்விமானகள், அரசியல் முக்கியஸ்தர்கள், என பலரும் பிரசன்னமாயிருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

சாம்பியனாக தெரிவாகிய மருதமுனை ஒலிம்பிக் அணியினருக்கு அஸ்ஸஹீத் தாவூத் & புஹாரி சவால் மற்றும் வெற்றிக்கிண்ணங்களுடன் 50000/= ரூபாய் பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டதோடு இரண்டாம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு கோப்ரா அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தோடு 30000/= ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது இந்த தொடரின் மூன்றாம் இடத்தை போட்டி ஏற்பாட்டாளர்களான ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதி போட்டியின் வரலாற்று நிகழ்வோடு சாட்டோ மன்சூர் மற்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உருக்கமான பேசுக்களினுடைய காணொளியும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

al al.jpg2 al.jpg2.jpg3 al.jpg2.jpg3.jpg9 al.jpg2.jpg4 al.jpg2.jpg8

Web Design by The Design Lanka