ஆங்கில ஹலால்கள்...!!! » Sri Lanka Muslim

ஆங்கில ஹலால்கள்…!!!

halal1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஆங்கிலத்தில் பெயர் வைத்தால்
அத்தனையும் ஆகுமாகும்
ஈங்கு சில பெயர்களினை
எடுத்தெழுத முனைகின்றேன்

ஆடவரும் பெண்டிரும்
அன்னியோன்யம் தடையாம்.
லீடர்சிப் நிகழ்ச்சி என்றால்
கூடலாமாம் பாடலாமாம்.

சூதென்றால் பாவமாம்
சுத்தமான ஹறாமாம
SMSல் win என்றால்
கஸ்டமர்க்கு ஆகுமாம்

அபகரித்தல் கூடாதாம்
அது பெரிய பாவமாம்
சிவில் லோவில் கெஸ் வென்றால்
அவையெல்லாம் ஆகுமாம்

ஏமாற்றல் கூடாதாம்
இறைவன் வெறுப்பானாம்
கார்மெண்டில் பொய்லேபல்
பொறித்தல் பிஸ்னஸ்ஸாம்

எப்படிப் பார்த்தாலும்
இலஞ்சம் கூடாதாம்
சப்போர்ட் தாரன் எனக் கூறல்
சரியான செயலாம்

வட்டி என்று சொன்னாலே
வாய் வெந்து போகுமாம்
கமிஷனுக்குச் செக் என்றால்
மனிசனுக்கு ஆகுமாம்

ஆள் என்றால் பரிசுத்தம்
அவர் போதை தொட மாட்டார்
கோலாவில் அல்கஹோலை
கூலாகக் குடிக்கலாமாம்.

என்ன பெயர் சொன்னாலும்
இதயம் பொய் சொல்லாது
தன்னிடமே கேட்டுப் பார்த்தால்
உண்மை பொய் புரிந்து விடும்

Web Design by The Design Lanka