ஆசாத் சாலியின் கைது தொடர்பில், முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் என்ன..? - Sri Lanka Muslim

ஆசாத் சாலியின் கைது தொடர்பில், முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதம் என்ன..?

Contributors

ஆளுனர் அசாத் சாலியின் கைது தொடர்பில் இலங்கை முஸ்லிம் பேரவை, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ரம்ஸி ராசீக் உள்ளிட்ட சில முஸ்லிம்கள், முன்னணி செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக அசாத் சாலி குரல் கொடுத்து வந்தார் என சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சஹ்ரான் தொடர்பில் அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்தார் எனவும், ஈஸ்டர் தாக்குதல்களை முதலில் கண்டித்தவர் அவர் எனவும் முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அசாத் சாலி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்துமாறும் குற்றச்செயல்களில் ஈடுபட்டாவிட்டால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம் பேரவை, பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team