ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லை..! - Sri Lanka Muslim

ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லை..!

Contributors
author image

Editorial Team

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள மாதாந்த மேலதிக கொடுப்பனவான 5,000 ரூபாவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு 2022 ஜனவரி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற கணக்காளர்கள் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மேலதிக கொடுப்பனவு, ஆசிரியர் கொடுப்பனவு பட்டியலில் காட்டப்பட்டுள்ள போதிலும், அது கொடுப்பனவுடன் சேர்க்கப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கடந்த 2 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

அத்துடன், ஓய்வூதியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 666,480 ஓய்வூதியர்களுக்கு 5,000 ரூபா மாதாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team