ஆசிரியர் தினத்தில் நுவரெலியாவில் கல்விச் சமூகத்தினர் ஆர்ப்பாட்டப் பேரணி..! - Sri Lanka Muslim

ஆசிரியர் தினத்தில் நுவரெலியாவில் கல்விச் சமூகத்தினர் ஆர்ப்பாட்டப் பேரணி..!

Contributors

(செ.திவாகரன்)

ஆசிரியர் தினமான இன்று கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

நுவரெலியாவின் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக கல்விச் சமூகத்தினர் எதிர் நோக்கும் கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமும் எழுப்பியவாறு பேரணியை இவர்கள் நடத்தினர்.

1994 ஆம் ஆண்டுக்குப் பின்னராக நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரண்பாடு மற்றும் சம்பள நிலுவை உட்பட கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறிய வேண்டும், நாட்டின் தேசிய வருமானத்தில் 06% வீதத்தை ஆசிரியர் சேவைக்கு ஒதுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பாரிய போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team