ஆசிரியர் தொழிற்சங்கங்களின் மீது அதிருப்தி தெரிவிக்கும் ஆசிரியர்கள். » Sri Lanka Muslim

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் மீது அதிருப்தி தெரிவிக்கும் ஆசிரியர்கள்.

protests-1312070814-209-640x480

Contributors
author image

ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்

ஆசிரியர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு சுதந்திரமாக வும் ேநர்மையாகவும் முன்னின்று செயல்படுதல் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் விடயங்களிற்கு குந்தகம் ஏற்படாதவாறு செயல்படுதல் ேபான்ற விடயங்களின் அடிப்படையில் உயரிய நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே ஆசிரியர் தொழிற்சங்கங் களnகும்.

ஆனால்கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற சில ஆசிரியர்தொழிற்சங்கங்கள் அதன் நோக்கம்இலக்கினை மறந்து சுயநல நோக்கங்களுடனும், அதிகாரிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்பவும் செயற்படுவதாக குற்றம் சாற்றப்பட்டுள்ளது , ஆசிரியர்கள் கூறும் குற்றச்சாற்று வருமாறு : ஆசிரியர்களிடம் அங்கத்துவப் பணம் அறவிடப்படுகிறது ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் பதவி உயர்வு . சம்பள உயர்ச்சி ,சம்பள நிலுவை .ஆசிரியர் இடமாற்றம், பரிட்சை மேற்பார்வையாளர்கள் புறக்கணிப்பு வலயக் கல்வி அலுவலகம் ஆசிரியர்களின் விடயங்களை இலுத்தடித்தல் தொழிற்சங்கங்களின் வருடாந்த கூட்டம் நிருவாக தெரிவு . வெளிப்படைத் தன்மை இல்லாமை, வலயக் கல்வி பணிப்பாளர். கல்விச் செயலாளர் மாகாணப் பணிப்பாபாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுதல்.

நகரப் பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குதல், தொழிற் சங்க பிரதிநிதிகள் கூடிய சலுகைகளை அனுபவித்த . கஷ்ட்டப் பிரதேச பாடசாலை விடயங்களை கண்டு கொள்ளாமல் இருத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆசிரியர் தொழிற்சசங்கங்கள் மீது சுமத்தப்படுகின்றன.

இன்று கிழக்கு மாகாணம் கல்வி அபிவிருத்தியில் பின்னடைவதற்கு ஆசிரியர்கள் மீது மாத்திரம் குற்றம் சாட்ட முடியாது ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது

Web Design by The Design Lanka