ஆடம்பர ஆயரை பதவியில் இருந்து இடைநிறுத்தினார் பாப்பரசர்! - அவரது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும்படியும் பணிப்பு. - Sri Lanka Muslim

ஆடம்பர ஆயரை பதவியில் இருந்து இடைநிறுத்தினார் பாப்பரசர்! – அவரது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும்படியும் பணிப்பு.

Contributors

ஜெர்மனியில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை பல மில்லியன் டொலர்கள் செலவு செய்து புதுப்பித்த கத்தோலிக்க ஆயர் ஒருவரை பாப்பரசர் பிரான்சிஸ் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். வத்திக்கானில் பாப்பரசருடன் நடந்த சந்திப்பையடுத்து, ஆயர் Franz-Peter Tebartz காலவரையின்றி அவரது மறைமாவட்டத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டுள்ளார். பெருமளவிலான மக்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு வரிசெலுத்தும் ஜெர்மனியில், இந்த ஆயரின் அளவுகடந்த செலவினங்கள் தொடர்பில் அதிருப்தி வெளிப்பட்டிருந்தது.

ஏழை மக்கள் மீது திருச்சபை சமூகம் இரக்கமும் மரியாதையும் காட்டவேண்டும் என்று புதிய பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆயரை ஆடம்பர ஆயர் என்று ஜேர்மனிய வானொலிகள் வர்ணித்திருந்தன.

Web Design by Srilanka Muslims Web Team