ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ! - Sri Lanka Muslim

ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் !

Contributors

(அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாநகர முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பருக்கு முதல்வர்

ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு அதிதிகளாக மாகாண சபை அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பிரதேச சபை தவிசாளர்களும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team