ஆட்சி பீடமேற்றிய தேரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முரண்பட்டுக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள்..! - Sri Lanka Muslim

ஆட்சி பீடமேற்றிய தேரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முரண்பட்டுக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள்..!

Contributors

பௌத்த தேரர்களுடன், தற்போது ஆட்சியமைத்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் , தொடர்ந்தும் முரண்டு வருவதாக தென்னிலங்கை  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் நாரஹென்பிட்டி  அபயராம விகாரையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  வைத்திய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, தான் அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆனந்த தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வாக்குவாதத்தின் பின்னர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மீளவும் ஆரம்பிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே நாரஹென்பிட்டி அபயராமையில் பிரதானியான முருத்தொட்டுவே ஆனந்த தேரரும் அரசாங்க தரப்பினரும் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும்  ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முருத்தொட்டுவே தேரர் தீவிரமாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை பிரதமர், எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் அபயராமையில் உள்ள அலுவலகத்தில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

Web Design by Srilanka Muslims Web Team