ஆண்டு தோறும் 9600 இலங்கைப் பெண்கள் சவூதி அரேபியாவிற்கு தொழில் தேடிச் செல்வதே ஆசியாவின் ஆச்சரியம் - Sri Lanka Muslim

ஆண்டு தோறும் 9600 இலங்கைப் பெண்கள் சவூதி அரேபியாவிற்கு தொழில் தேடிச் செல்வதே ஆசியாவின் ஆச்சரியம்

Contributors

பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கைப் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது பெருமபட வேண்டிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவி மக்களை ஏமாற்றும் நோக்கில் ரட்ட விருவோ(வெளிநாட்டு வீரர்) என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரித்துள்ளார். பெண் வீட்டுப் பணிப் பெண்கள் தங்களது உடலை விற்பனை செய்கின்றனர் என அவா குறிப்பிட்டுள்ளார். ஆண்டு தோறும் 9600 இலங்கைப் பெண்கள் சவூதி அரேபியாவிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் செல்வதாகவும் இதுவே ஆசியாவின் ஆச்சரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூடான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையை விடவும் வறுமையானது என்ற போதிலும் தமது நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து அந்த நாடுகள் பிழைப்பு நடத்தவில்லை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். gtn

 

Web Design by Srilanka Muslims Web Team