ஆபத்தான நிலையில் திருகோணமலை, 24 மணித்தியாலத்தில் 7 பேர் மரணம்..! - Sri Lanka Muslim

ஆபத்தான நிலையில் திருகோணமலை, 24 மணித்தியாலத்தில் 7 பேர் மரணம்..!

Contributors

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனாவால் 7 மரணங்கள் பதிவாகி உள்ளன.

குறிஞ்சாங்கேணி பகுதியில் ஐவரும், கிண்ணியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் தலா இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 29 ஆண்களும் 23 பெண்களும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவருகின்றது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 104 பேர் மரணித்து உள்ள நிலையில் 3616 பேர் மொத்தமாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், 95 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team