ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டால் ஆண்கள் அணியுடான டெஸ்ட் போட்டி இரத்து – அவுஸ்திரேலியா எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டால் ஆண்கள் அணியுடான டெஸ்ட் போட்டி இரத்து – அவுஸ்திரேலியா எச்சரிக்கை..!

Contributors

தலிபானின் ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஆண்கள் அணியுடனான டெஸ்ட்போட்டியை இரத்துச்செய்யப்போவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
பெண்கள் அனைத்து நிலைகளிலும் கிரிக்கெட் விளையாடுவதை முழுமையாக ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையானவை என்றால் ஹொபார்ட்டில் நடைபெறவுள்ள ஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய ஆப்கான் அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸட் போட்டி நவம்பர் 26 ம் திகதி இடம்பெறவுள்ளது.
பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தலிபானின் கலாச்சார ஆணைக்குழுவின் பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் விளையாடவேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி இந்த கருத்து குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team