ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ்பெறத் தொடங்கிய அமெரிக்கப் படைகள்..! - Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ்பெறத் தொடங்கிய அமெரிக்கப் படைகள்..!

Contributors
author image

Editorial Team

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ல் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் குவிக்கப்பட்டனர். 20 ஆண்டாக ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரில் 2,442 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 20,666 பேர் காயமடைந்தனர். 1,144 நேட்டோ படையினர் பலியாயினர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற முந்தைய அதிபர் டிரம்ப் கூறி வந்தார். புதிய அதிபர் பைடனும் படையை முழுமையாக வாபஸ் பெறப்படும் என சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, கடைசி கட்டமாக மீதமுள்ள 2500-3000 அமெரிக்க வீரர்களும், 7500 நேட்டோ படையினரும் நாடு திரும்பும் நடவடிக்கை முறைப்படி நேற்று தொடங்கியது.

Web Design by Srilanka Muslims Web Team