ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரி என்று சிறுமி கைது - Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரி என்று சிறுமி கைது

Contributors

 

-BBC-

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குரிய அங்கியை அணிந்திருந்தார் என்று கூறி ஒரு சிறுமியை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

 

எட்டு வயதே இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்ற அந்தச் சிறுமி, ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு காவல்துறை சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றபோது பிடிபட்டார் என்று உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளார் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

அந்தச் சிறுமி அதிர்ச்சியிலும் ஒரு குழப்ப நிலையிலும் உள்ளார் என்று கூறப்படுகிறது.

‘தாலிபான் தளபதியின் சகோதரி’

தாலிபான் போராளிகள்

அவர் அணிந்திருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியில், வெடிக்கச் செய்யவதற்குரிய விசையை அவரால் கையாள முடியவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

 

இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும்படி, தாலிபான்களின் ஒரு முக்கியமான தளபதி என்று கருதப்படும் அந்தச் சிறுமியின் சகோதரரே அவரை ஊக்குவித்தார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்..

 

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி இப்போது மாகாணத் தலைநகரான லஷ்கர் காஹ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team