ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 10 பொலிசார் பலி - Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 10 பொலிசார் பலி

Contributors

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மாண்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 பொலிசார் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் நேற்று தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் சாங்கின் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் முகம்மது சர்வாரி உட்பட 10 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

270 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பெப்ரவரியில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டனர் மற்றும் 173 பேர் காயமடைந்தனர்.

பெப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில் சாலையோர வெடிகுண்டு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலிபான் தாக்குதல்கள் உள்ளிட்ட 166 சம்பவங்கள் நடந்து உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team