ஆப்கான்: ஆண்-பெண் மாணவர்களுக்கிடையே திரை கட்டி வகுப்புகள் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

ஆப்கான்: ஆண்-பெண் மாணவர்களுக்கிடையே திரை கட்டி வகுப்புகள் ஆரம்பம்..!

Contributors

ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை கட்டி வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

உள்நாட்டுப் போருக்குப் பின் ஆப்கானிஸ்தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலிபானின் கல்வி ஆணையம், கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் கூறுகிறது

அதில், மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளை அமைக்க வேண்டும்.
வகுப்புகள் முடிவடையும்போது மாணவர்கள் வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே மாணவிகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். மாணவிகள் நிகாப், புர்கா உடைகள் கட்டாயம் அணிய வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை கட்டி வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team