ஆயிரக்கணக்கான விவசாயிகள் கொழும்பிற்குள் நுழையும் நிலையை ஏற்படுத்தவேண்டாம் - விவசாய தொழிற்சங்கம்..! - Sri Lanka Muslim

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கொழும்பிற்குள் நுழையும் நிலையை ஏற்படுத்தவேண்டாம் – விவசாய தொழிற்சங்கம்..!

Contributors

அரசாங்கம்; உரப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காவிட்டால் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் கொழும்பிற்குள் நுழைவார்கள் என அகில இலங்கை விவசாய கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணரட்ண தெரிவித்துள்ளார்.

சேதன உரத்தை பயன்படுத்தப்போகின்றோம் என தெரிவிக்கும் சேதன உரத்தை இறக்குமதி இரசாயன உரத்தை இறக்குமதி செய்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் தனது தவறை ஏற்றுக்கொண்டு முடிவை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். ஏரிகளில் நீர் நிறைந்துள்ளது நெல்வயல்களும் அவ்வாறே காணப்படுகின்றன ஆனால் வயல்கள் வெறுமையாக காணப்படுகின்றன. இது இலங்கையின் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மகாசேனன் தற்போது ஆட்சியிலிருந்திருந்தால் இந்த ஆட்சியாளர்களை தூக்கிலிட்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் 17982 மெட்ரிக் தொன் உரங்களை 08.56 மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்கின்றது. இவை உரங்கள் இல்லை அரசாங்கம் தெரிவிப்பது போல இவை சேதனப்பசளைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேதனப்பசளைகள் என்ற போர்வையில் ஏன் அவர்கள் இரசாயன உரங்களை இறக்குமதி செய்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கம் பாரிய குழப்பங்களை உருவாக்கியுள்ளது அது உண்மை தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் சுயவிமர்சனத்தில் ஈடுபடுங்கள் முடிவை மாற்றுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் கொழும்பிற்குள் நுழையும் நிலையை ஏற்படுத்தவேண்டாம் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team