ஆளும் கட்சியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி: தலைவர் மாத்திரம் ஆதரவு - Sri Lanka Muslim

ஆளும் கட்சியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி: தலைவர் மாத்திரம் ஆதரவு

Contributors

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

நகர சபைத் தலைவர் உபாலி அரம்பவத்தவினால் இன்று (18) முதல் முறையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டது.

இதன்போது மொத்த ஒன்பது வாக்குகள் (ஆளும் தரப்பு -6, எதிர் தரப்பு – 3) அளிக்கப்பட்ட நிலையில் ஒரு வாக்கு மாத்திரமே ஆதரவாக அளிக்கப்பட்டது. அதுவும் வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த நகர சபை தலைவருடைய வாக்காகும்.

ஏனைய ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் ஜா-எல நகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. (அத தெரண )

Web Design by Srilanka Muslims Web Team