ஆளும் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஹிருனிகா? - Sri Lanka Muslim

ஆளும் கட்சியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஹிருனிகா?

Contributors

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர போட்டியிட உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன், ஹிருனிகாவும் அவரது தாயாரும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். விரைவில் மேல் மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

தேர்தலில் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது. வழக்கு விசாரணைகளின் பின்னர் நடைபெறவுள்ள ஊடகச் சந்திப்பில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.(j.n)

Web Design by Srilanka Muslims Web Team