ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன்: சனல்-4 இயக்குநர் - Sri Lanka Muslim

ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன்: சனல்-4 இயக்குநர்

Contributors

யுத்த குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்குமாயின் அவை தொடர்பிலான ஆவணப்படங்களை எதிர்காலத்தில் இன்னும் இன்னும் தயாரிப்பேன் என்று சனல்-4 ஊடகவியலாளரும் ‘யுத்த சூன்ய வலயம்’ படத்தின் இயக்குநருமான கலம் மக்றே தெரிவித்துள்ளார்.

‘ஐக்கியத்துக்கான சக்தி’ எனும் ஐக்கிய தேசியக்கட்சி சார்பான அமைப்பு ஜாதிக சேவா சங்கம் தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வலுவான சான்றுகள் கிடைக்குமாயின் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் பற்றி ஆவணப்படங்களை இன்னும் தயாரிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்காமல் அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டுமென என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் என்ற வகையில் தான் தனது கடமையை செய்துவருவதாகவும் அவர் கூறினார். உண்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே தான் ஆவணப்படங்களை தயாரித்ததாக மக்றே கூறியுள்ளார்.tm

Web Design by Srilanka Muslims Web Team