இங்கிலாந்து வீரரின் துடுப்பாட்ட மட்டை இரண்டாக உடைந்தது! அதிர்ச்சி Video - Sri Lanka Muslim

இங்கிலாந்து வீரரின் துடுப்பாட்ட மட்டை இரண்டாக உடைந்தது! அதிர்ச்சி Video

Contributors

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் அவிஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.

448 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய அணி 281 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இரண்டாவது இனிங்சிஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்றாம் நாளான இன்று 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

கிறிஸ் ரொஜர்ஸ் 119 ஓட்டங்களை  பெற்றதுடன், இங்கிலாந்து சார்பில்   ஸ்கோர்ட் போர்த்விக் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

மைக்கல் கார்பெரி 43 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் ரெயான் ஹரிஸ் 25 ஓட்டங்களுக்கு, 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக ரெயான் ஹரிஸ் தெரிவான அதேவேளை, தொடரின் நாயகனாக மிச்சல் ஜோன்சன் தெரிவானர்.

இப் போட்டியின் சுவாரஸ்யமான நிகழ்வாக இங்கிலாந்து வீரர் மைக்கல் கேப்ரி துடுப்பாடும் போது அவுஸ்திரேலிய வீரர் Ryan Harris இன் பந்தை எதிர் கொண்ட போது துடுப்பாட்ட மட்டை இரண்டாக உடைந்து விளையாட்டு வீரர்கள் உட்பட இரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team