ஆஸ்ரேலியாவில் 40 வருடம் காணாத காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம். » Sri Lanka Muslim

ஆஸ்ரேலியாவில் 40 வருடம் காணாத காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்.

fire

Contributors

ஆஸ்திரேலியாவின், நியூசவுத் வேல்ஸ் பகுதியில், காட்டுத் தீ பரவி வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில், கோடைக்காலங்களில், வெப்பத்தின் காரணமாக காட்டு தீ ஏற்படுவது சகஜமானது. ஆனால், இந்த முறை, ப்ளூ மவுன்டன் பகுதியில், கடந்த, 40 ஆண்டுகளாக இல்லாத வகையில், காட்டு தீ கடுமையாக பரவி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ, 100 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தால், சிட்னி வரை பரவி வருகிறது.
இதனால், சிட்னியில் வசிக்கும் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுகின்றனர்.  இதே வேளை நியூ சவுத் வேல்சின் மையப் பகுதியில்  உள்ள தனது வீட்டை, தீயில் இருந்து காக்கும் முயற்சியில், 63 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியா முழுவதிலும் இருந்து, 2,000 தீயணைப்பு விமானங்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறுக்கின்றன. எனினும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

Web Design by The Design Lanka