இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டுகளாக சேவகம் செய்யும் பூனை - Sri Lanka Muslim

இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டுகளாக சேவகம் செய்யும் பூனை

Contributors

இங்கிலாந்து பிரதமர் வீட்டுக்கு எலி தொல்லையை குறைக்க கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது.

இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக அவர் வீட்டில் ஒரு பூனை வளர்க்க விரும்பினார்.

ஒரு நாள் அவரது வீட்டின் அருகே மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வாகனத்தில் தெருவில் சுற்றி திரிந்த பூனைகளை பிடித்து செல்வதை கண்டார். அதில் இருந்து ஒரு பூனையை தன் வீட்டில் வளர்ப்பதற்கு கேட்டார்.

மாநகராட்சி ஊழியர்கள் வழங்கிய பூனை, அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனின் அரசு வீட்டில் வளர்ந்து வந்தது. அங்கு தொல்லை கொடுத்த எலிகளையும் பிடித்தது.

டேவிட் கேமரூனுக்கு பிறகு தெரசாமேயும், இப்போது போரீஸ் ஜான்சனும் பிரதமராக உள்ளார்.

ஆனால் பிரதமரின் வீட்டில் இருந்த பூனை மட்டும் மாறவேயில்லை. அந்த பூனை பிரதமர் வீட்டுக்கு சென்று நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்தது. இதனை பிரதமர் வீட்டு பணியாளர்கள் தெரிவித்தனர். பூனை வந்த பிறகு எலி தொல்லை குறைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Web Design by Srilanka Muslims Web Team