இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விலைமாது தொழிலுக்கு விளம்பரம். - Sri Lanka Muslim

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விலைமாது தொழிலுக்கு விளம்பரம்.

Contributors

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விலைமாதுவாக பணி புரிய பெண்கள் தேவை’ என வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டன் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.mirror.co.uk/news/uk-news/job-seekers-government-website-publishes-2968598

பொதுவாக குடும்பத்தை பிரிந்து பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் மக்களுக்கு தகுந்த துணையை அமைத்துத் தருவதையே தொழிலாகக் கொண்டு செயல் படுகின்றன சில நிறுவனங்கள்.

அதன்படி, தனியாக வரும் ஆணுக்கு துணையாக பெண்களையும், பெண்ணுக்கு துணையாக ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

இந்த வழித்துணையாளர்கள் அமைத்துத் தரும் பணி ‘எஸ்கார்ட் சர்வீஸ்’ என்றழைக்கப்படும். இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் ‘ஹார்னி எஸ்கார்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ‘தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும்.

விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team