இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது அவுஸ்திரேலியா - Sri Lanka Muslim

இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது அவுஸ்திரேலியா

Contributors

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி பாரம்பரியமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

முதல் நான்கு போட்டியில் வென்ற அவுஸ்திரேலியா 4–0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.

கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி சிட்னியில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களும், இங்கிலாந்து 155 ஓட்டங்களும் எடுத்தன.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து, 311 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு, பெய்லி (46) தாக்குபிடிக்கவில்லை. ரோஜர்ஸ் (119) சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்கள் ஏமாற்ற இரண்டாவது இன்னிங்சில் 276 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேலும் இங்கிலாந்து அணிக்கு 448 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.(lw)

கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால், 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக 5–0 என ஆஷஸ் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team