இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு.. » Sri Lanka Muslim

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு..

yous666

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கேட் ஸ்டீபன்ஸ் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை .1948 இல் லண்­டனில் பிறந்தவர் . 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர்.இவர் வெளியட்ட பல பாடல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மில்லியன் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்தது..மேலும் அந்த காலகட்டத்தில் பல புகழ் பெற்ற விருதுகளையும் பெற்றார்… அவரின் வாழ்க்கை தொகுப்பு …

சிறு பிராயம்:

தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.

ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.

பிரபல பாப் இசைப்பாடகராக…

நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.

எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.

இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.

இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.இதே காலகட்டத்தில் 1976 ஆம் ஆண்டு மொரோக்கோ சென்றிருந்த போது அங்கு தற்செயலாக அதான் என்னும் முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பை கேட்ட போது இசை என்பது கடவுள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்..மேலும் இசை என்பதே பணம் , புகழ் மட்டும் என்ற தனது முடிவில் மாற்றத்தை கொண்டு வந்தது ..

மருத்துவமனையில் நுழைதல்:

வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.

நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.

முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.

இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், ‘உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.’

அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.

நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:

சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.

இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.

இச்­சந்­தர்ப்­பத்தில் நான் ஒரு நிலைக்கு வந்தேன். பெளத்த மதமே சரி­யா­னது. சமா­தா­னத்­தையும், நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யையும் தரக் கூடி­யது என்ற தீர்­மா­னத்­திற்கு வந்தேன். ஆனால் நான் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் உல­கத்தை விட்டும் விலக விரும்­ப­வில்லை. எனது சமூ­கத்­தி­லி­ருந்தும் விடு­பட்டு ஒரு துற­வி­யாக விரும்­ப­வில்லை.

இஸ்லாத்தை பற்றிய அறிமுகம் .

இந்தச் சந்­தர்ப்­பத்தில் எனக்கு இஸ்­லாத்தைப் பற்றி எதுவும் தெரிந்­தி­ருக்­க­வில்லை. அப்­போது தான் அந்த அதி­சய சம்­பவம் நிகழ்ந்­தது. ஜெரூ­ஸ­லத்­தி­லி­ருந்த பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு விஜயம் செய்த எனது சகோ­தரர் David Gordon அங்­கி­ருந்து குர்ஆன் மொழி பெயர்ப்பு பிர­தி­யொன்­றினைக் கொண்டு வந்து என்­னிடம் பிறந்த நாள் பரிசாக கொடுத்தார்..

ஜெரூ­சலம் பள்­ளி­வாசல் தேவா­ல­யங்­களைப் போல் வெறிச்­சோ­டி­யில்­லாது சுறு­சு­றுப்­பாக இருந்­த­தாக என்­னிடம் கூறினார். அவர் இஸ்­லாத்­துக்கு மதம் மாற­வில்லை. ஆனால் இஸ்லாமிய சம­யத்­தினால் கவ­ரப்­பட்­டி­ருந்தார்.

குர்­ஆனை வாசித்தபோதுதான் எனக்கு சரி­யான வழி­காட்டல் கிடைத்­தது. நான் யார்? நான் எந்த நோக்­கத்­திற்­காக வாழ வேண்டும்? நான் எங்­கி­ருந்து வந்­துள்ளேன்? இவை பற்­றி­யெல்லாம் நான் தெளி­வாக விளங்கிக் கொண்டேன். அனைத்தும் இறை­வனின் செயல் அனைத்­தையும் உரு­வாக்­கி­யவன் அவனே என்­பதை நான் உணர்ந்தேன். நான் நல்ல மனி­த­னாக மாற்றம் பெறு­வ­தற்­கான அனைத்தும் இஸ்­லாத்தில் அடங்­கி­யி­ருந்­தது.

பாலஸ்தீன் பயணம்..

”நான் ஜெரூ­ஸ­லத்­துக்குப் போக வேண்டும். முஸ்லிம் சகோ­த­ரர்­களைச் சந்­திக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் வளர்ந்­தது. புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிர­தியை நான் வாசித்து விளங்­கிய பின்பே இந்த உந்­துதல் எனக்குள் ஏற்­பட்­டது.புனித குர்­ஆனை முழு­மை­யாக வாசித்து இஸ்­லாத்தைப் புரிந்து கொண்­ட­துடன் 1977இல் ஜெரூ­சலம் பள்­ளி­வா­ச­லுக்குள் சென்று பெற்ற அனு­ப­வங்­களும் என்னை இஸ்­லா­மி­ய­னாக்­கின. அங்­கே­யுள்ள பள்­ளி­வாசல் என்னைக் கவர்ந்­தது. பாத­ணி­களைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தேன். பள்­ளி­வா­ச­லினுள் ஓர் ஓர­மாக அமர்ந்து கொண்டேன்.

நீங்கள் யார்? ஏன் இங்கு வந்­தீர்கள்? உங்­க­ளுக்கு என்ன வேண்டும்? என்று அங்­கி­ருந்த ஒருவர் கேள்­வி­களை ஒன்றன் பின் ஒன்­றாகத் தொடர்ந்தார்.
நான் அமை­தி­யாகப் பதி­ல­ளித்தேன். பள்­ளி­வா­சலின் அமைதி, புனிதம் என்­பன என்னை முழு­மை­யாக உள்­வாங்­கி­யி­ருந்­தது.

‘நான் ஒரு முஸ்லிம்’ என்று பதி­ல­ளித்தேன். எனது பதிலில் எனக்கு மிகுந்த மன நிறைவும் திருப்­தியும் இருந்­தது. அந்த சகோ­தரர் எனது பதிலில் திருப்­தி­ய­டை­ய­வில்லை.
உங்­க­ளது பெயர் என்ன? என்று வின­வினார்.

எனது பெயர் ‘ஸ்டீவன்ஸ்’ என்றேன். எனது பதி­லினால் அச்­ச­கோ­தரர் அதிர்ச்­சிக்­குள்­ளாகி விட்டார். அப்­பள்­ளி­வா­சலில் நான் தொழு­கையில் ஈடு­பட்டேன். ஆனால் அது ஒழுங்கு முறை­யி­லான தொழு­கை­யாக அமை­ய­வில்லை.

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றல்..

எனது ஜெரூ­ஸ­லத்துப் பய­ணத்தை முடித்துக் கொண்டு புதிய அனு­ப­வங்­க­ளுடன் இலண்­ட­னுக்குத் திரும்­பினேன் லண்­டனில் ஒரு முஸ்லிம் சகோ­த­ரியைச் சந்­தித்தேன் அவ­ரது பெயர் நபீஸா.

புனித குர்­ஆனை வாசித்­ததில் இருந்து எனக்குள் புதுத்­தெம்பு பிறந்­தி­ருந்­தது. குர்ஆன் போதிக்கும் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்­தி­ருந்­தது. நான் இஸ்­லாத்தைத் தழுவ வேண்டும் என்று அந்தச் சகோ­த­ரி­யிடம் தெரி­வித்தேன். அவர் என்னை லண்டன் புதிய ரீஜன்ட் பள்­ளி­வா­ச­லுக்கு அனுப்பி வைத்தார்.ஒரு வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையின் பின்பு இமா­மிடம் சென்று இஸ்லாத்தின் மீதான எனது நம்பிக்கையை அவரது கரங்களுடன் எனது கரங்களை இணைத்து வெளியிட்டேன். இச்­சம்­பவம் 1977ஆம் ஆண்டு நடந்­தது. நான் புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிர­தி­யொன்­றினைப் பெற்று ஒன்­றரை வரு­டங்­களின் பின்பே இச்­சம்­பவம் நிகழ்ந்­தது.” ஆம் கேட் ஸ்டீவன்ஸ் தன்னை யூசப் இஸ்லாம் என்று உலகிற்கு பிரபலப்படுத்தினார்..

இன்று இவரது வாழ்க்கை..

1977 ஆம் ஆண்டு டிசம்பர் 23 நாள் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தனது பெயரை யூசுப் இஸ்லாம் என்று மாற்றிக்கொண்டார். யூசுப் இஸ்லாம் தான் அதிகம் நேசித்த இசை துறையை விட்டுவிட்டு தனது வருமானத்தை முஸ்லிம் சமூகத்திற்கு தன்னால் முடிந்த சேவையாக கல்வி மற்றும் மனித நேய சேவைகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார் .லண்டனில் எல்ஷ்வேரில் இவர் கட்டிய பள்ளிக்கூடம் இன்னும் பல சமூக சேவை மைய்யங்களையும் நடத்தி வருகிறார் .

உலகில் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு மனித நேய பணிகளை மேற்கொண்டார்..ஆப்ரிக்கா இராக் பால்கன் இந்தோனேசியா என உலகில் பல ஆயிரம் அநாதை குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் ஆனா சேவையை செய்து வருகிறார் .28 ஆண்டுகளுக்கு பின்னர் 2006 ஆம் ஆண்டு யூசுப் இஸ்லாம் உலக அமைதியை வலியுறுத்தி ஒரு இசை நிகழ்சியை நடத்தினார்.. மனிதாபி மான தொண்டு சேவைக்காக உலகின் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.. இஸ்லாம் தாவரக புரிந்து கொல்லப்பட்ட மார்க்கம்..இத்தகு யூசுப் இஸ்லாமின் வாழ்க்கையும் ஒரு உதாரணம் தான்.. இவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது சக முஸ்லிம்கள் இல்லை..மாறாக திருக்குர்ஆன் மட்டுமே.. இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள சரியான அளவு கோள் திருக்குர்ஆன் மட்டுமே.

yous

Web Design by The Design Lanka