இசை நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் சிங்கள இளைஞர்களுக்கிடையிலான மோதலின் எதிரொலி பள்ளிவசால் மீது தாக்குதல்? - Sri Lanka Muslim

இசை நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் சிங்கள இளைஞர்களுக்கிடையிலான மோதலின் எதிரொலி பள்ளிவசால் மீது தாக்குதல்?

Contributors
author image

Editorial Team

பதுளையில் பதற்ற நிலைமை ஏற்படக் கூடிய அபயாம் நிலவி வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 

சிங்கள முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட ரீதியான முரண்பாடே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்றைய தினம் பதுளையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

முஸ்லிம் இளைஞர் ஒருவர், சிங்கள இளைஞரை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதனை அடுத்து சிங்கள குழுக்கள் பதுளை நகர கடைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

நேற்றைய தினம் இரவு முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் படைகள் மீது கல் வீசப்பட்டுளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

தேர்தலுக்கு இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.(gtn)

Web Design by Srilanka Muslims Web Team