இச் சிறுமிக்கு உதவுங்கள் அல்லாஹ் உமது செல்வத்தை இரட்டிப்பாக்குவான் - Sri Lanka Muslim

இச் சிறுமிக்கு உதவுங்கள் அல்லாஹ் உமது செல்வத்தை இரட்டிப்பாக்குவான்

Contributors
author image

முஹம்மது அன்சார்

அன்புள்ளம் கொண்ட சகோதர / சகோதரிகளே..!

 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி
வ பரகாத்துஹு.

இலக்கம் 67/10, அலி ஜின்னாஹ் மாவத்தையில் வசித்து வரும்
சகோதரர், முகமது ஷிஃபான் (Mohamed Shifan) என்பவரது மகள் ஆகிலா மனால் (Aakilaa Manaal) – 2 வயதும் எட்டு மாதங்களும் – காது கேட்க, வாய் பேச முடியாத நிலையிலுள்ள ஒரு குழந்தையாக இருக்கிறார்.

 

இக்குழந்தையின் காதுகளை பரிசோதனை செய்த செவிப்புலனற்ற சிறுவர்கள் போதனா மத்திய நிலைய (CENTRE FOR EDUCATION OF HEARING IMPAIRED CHILDREN) பரிசோதகர் லக்ஷ்மன் பியன்வில (Dr. LAKSHMAN BIYANVILA) என்பவர், இக்குழந்தைக்கு செவிப்புல கருவியொன்றை பொருத்துவதன் மூலம் பேச்சுப்பயிற்சியினூடாக இக்குறையை சரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

மேற்படி செவிப்புல கருவிக்காகும் தொகை ரூபா. 360.000/- (மூன்று லட்சத்து அறுபதாயிரம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் நாம் பதிவொன்றை பிரசுரித்து இருந்ததை வாசகர்கள் அறிவர். அதனை தொடர்ந்து அன்புள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் இந்த குழந்தைக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கினர். மொத்தமாக சுமார் மூன்று லட்சத்து அறுபதாயிரம் தேவைபட்ட அதே வேளை எமது சகோதர, சகோதரிகள் மொத்தமாக இதுவரை இரண்டு லட்சம் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்கள் என எமக்கு அறியக் கிடைத்தது.
ஜஸாக் அல்லாஹ் சகோதர்களே. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
வைத்திய செலவுக்கு இன்னும் 160,000 (ஒரு இலட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் மாத்திரமே தேவைபடுகிறது. அதனையும் எமது சகோதர அன்புள்ளங்கள் கொடுத்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் மற்றுமொருமுறை உங்களிடம் இத்தகவலை கொண்டு வருகிறோம்.
இக்குழந்தையின் தந்தையான முகமத் ஷிஃபான் முச்சக்கர வண்டியோட்டிப் பிழைக்கும் ஒருவர். அவரது வருமானம் அன்றாடம் குடும்பத்தின் தேவைகளுக்கு மட்டுமே போதியதாக இருக்கும் நிலையில், தன் மகளுக்கான தேவைக்குரிய பெரும்தொகைப் பணத்தை தேடிக்கொள்ள மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

கீழே தரப்பட்டுள்ள படங்களில் ஒன்றில் கள்ளம் கபடமறியாமல் அமர்ந்திருக்கும் ஆகிலா மனால் குழந்தைக்கு உதவ வசதி படைத்த சகோதரர்கள் அனைவரும். தயவு செய்து கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் தமது உதவித் தொகைகளை அனுப்பி உதவுமாறு
உங்களனைவரையும் அல்லாஹ்வின் பெயரால் அவர் வேண்டுகிறார்.
இந்த குழந்தை செய்கின்ற நல்ல விடயங்களில் உங்களுக்கும் நன்மை வந்து சேர பிரார்த்திக்கிறோம்..

 

இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்பட்ட சகல ஆவணங்களையும் தரப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

 

வங்கி கணக்கு விபரம் :

 

M. S. M. SHIFAN.

A/C Number : 087002209549101

at SEYLAN BANK NITTAMBUWA / RANPOKUNUGAMA 087

 

மேலதிக விபரங்களுக்கு : 0778384065 / 0779142525.
-செய்தியாக்கம் : Razana Manaf-

 

aaa

Web Design by Srilanka Muslims Web Team