இஞ்சி கொடுத்து மிளகு வாங்கி விட்டோம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்..! - Sri Lanka Muslim

இஞ்சி கொடுத்து மிளகு வாங்கி விட்டோம்! முருந்தெட்டுவே ஆனந்த தேரர்..!

Contributors

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய தமக்கு இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

” சௌபாக்கிய நோக்கு என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் செயல்பட்டாலும் வாக்களித்த மக்கள் திருப்தி அடையவில்லை. சிலர் வந்து எங்களிடம் கேட்கின்றனர் தேரர் அவர்களே இது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா என்று.

அன்று கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றபோது மங்கல நிகழ்வாக இருந்தபோதும் தற்போது அமங்கல நிலை காணப்படுகிறது.

ஒருசிலர் பதவி விளங்குகின்றனர் சிலர் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கின்றனர் மத்திய வங்கி ஆளுநர் அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எல்லாவற்றிற்கும் இராணுவம். அரசு ஊழியர்கள் மனமுடைந்து உள்ளனர். அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை ஏற்படும் என நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டை சீன கொலனியாக மாற்ற வேண்டாம் என கூறினோம். ஆனால் அனைத்தையும் சீனாவிற்கு விற்றுள்ளனர் . தற்போது மேலும் 13 ஏக்கர் காணியை விற்க முயற்சித்து வருகின்றனர். அனலில் இருந்து நெருப்பில் விழும் நிலைக்கு மாறி உள்ளோம். “என அவர் தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team