இடைக்கால அறிக்கை பற்றிய கருத்தரங்கு » Sri Lanka Muslim

இடைக்கால அறிக்கை பற்றிய கருத்தரங்கு

ampa

Contributors
author image

A.B.M.Azhar - Journalist

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய  அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை பற்றியதொரு கருத்தரங்கு நாளை மறுதினம்
15.10.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 08.30 மணி தொடக்கம் 4.30 மணிவரை நிந்தவூர் ஈஎப் சி ஹோடலில் EFC இல் நடைபெறவுள்ளது.

இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆளமாக ஆராயப்பட இருப்பதுடன், இது பற்றி தெளிவூட்டல் விளக்கமும் அளிக்கப்படவுள்ளது.

இடைக்கால அறிக்கையில் உள்ள நன்மை, தீமைகள், சிறுபான்மையினருக்கு ஏற்படவுள்ள பாதகங்கள் போன்றனவும் ஆராயப்படவுள்ள இக்கருத்தரங்கில் , இடைக்கால அறிக்கையின் தமிழ் வடிவப் பிரதிகளும் வழங்கி வைக்கப்படும்.

இதில் வளவாளராக பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான வை.எல்.எஸ்.ஹமீட் கலந்து கொள்ளவுள்ளதாக போரத்தின்
செயலாளர்எம் எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka