இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது - முகுது மகா­வி­காரதி­பதி..! - Sri Lanka Muslim

இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது – முகுது மகா­வி­காரதி­பதி..!

Contributors

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கிழக்கு மாகா­ணத்தில் தொல்­பொருள் சின்­னங்கள் உள்­ள­டங்­கிய காணி­களை கைய­கப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இனந்­தெ­ரி­யாத சக்­திகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான காணி­களை இச் சக்­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக நிரந்­த­ர­மான திட்­ட­மொன்று வகுக்­கப்­பட வேண்­டு­மென முகுது மகா­வி­காரை அதி­பதி வர­கா­பொல இந்­திர சிறி தேரர் தெரி­வித்தார்.

கிழக்கு மாகா­ணத்தில் அழிக்­கப்­பட்டு வரும் தொல்­பொருள் பிர­தே­சங்கள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘அருகம் குடா கரை­யோ­ரத்தில் உள்ள வன­பா­து­காப்பு திணைக்­களம் மற்றும்  கரை­யோர பாது­காப்புத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான காணிகள் தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மான காணிகள் என்­பன காணி அதி­கா­ரிகள் எனக் கூறிக்­கொள்ளும் அர­சியல் அதி­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய நபர்கள் அரச அதி­கா­ரி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து இந்த காணி கொள்­ளையில் சூட்­ச­க­மான முறையில் ஈடு­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் உள்­ளன எனவும் தேரர் தெரி­வித்தார்.

கொவிட்19 தொற்­றினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நாட்டில் பயணக் கட்­டுப்­பா­டுகள் அமுலில் உள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் குடா­கல்லி, அரு­கம்பை, பச­ரச்­சேனை, கடொ­லான உட்­பட்ட காணிகள் துப்­பு­ரவு செய்­யப்­பட்ட வரு­கி­றது. மரங்கள் வெட்­டப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் குறித்து தொல்­பொருள் திணைக்­களம் மற்றும் வன­பா­து­காப்பு திணைக்­களம் என்­ப­ன­வற்­றுக்கு ஏற்­க­னவே முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.  ஆனால் முறைப்­பா­டுகள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது. தொல்­பொ­ருட்கள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்றால் இந் நிலை­மையை கவ­னத்தில் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து வணக்க ஸ்தலங்­க­ளுக்கும் ஒவ்வோர் பன்­சலை நிர்­மா­ணிக்­கப்­பட வேண்­டு­மென நான் சிபா­ரிசு செய்­கிறேன்.

அனைத்து தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளையும் உள்­ள­டக்கி தொல்­பொருள் வல­ய­மாக பெய­ரிட்டு எல்லை அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். எல்லைக் கற்கள் நடப்­ப­ட­வேண்டும். பாது­காக்­கப்­பட வேண்­டிய அனைத்து இடங்­க­ளிலும் இடி விழுந்தால் கூட அறி­யாத வகையில் உறங்­கிக்­கொண்­டி­ருக்கும் அதி­கா­ரிகள் சேவையில் இருந்து அகற்­றப்­பட வேண்டும். செயற்­திறன் மிக்க அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும். இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பும் இக்­கோ­ரிக்கை அர­சாங்­கத்­திடம் முன் வைக்­கப்­பட்­டது.

முறை­யற்ற செயற்­பா­டுகள் தொடர்­பாக அதி­கா­ரிகள் பொலிஸில் முறை­யிட்­டாலும் அதனால் எது­வித பல­னு­மில்லை. பொலிஸார் இவ்­வாறு அச­மந்தப் போக்­காக செயற்­ப­டக்­கூ­டாது. பிர­தே­சங்­களின் சூழ்­நி­லைக்­கேற்ப அதி­கா­ரி­களை செயற்­ப­டுத்­தும் ­அ­ர­சியல் சக்­திகள் இருக்­கின்­றன. இயங்கி வருகின்றன. அவர்களுக்கு எதிராக பேசினால் தங்கள் பதவி நட்சத்திரங்கள் இழக்கப்படுவோம், இடமாற்றம் செய்யப்படுவோம் என்ற பயம் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மதிப்புள்ள காணிகளை இரகசியமாக அழிக்கும் சக்திகள் தலையெடுக்கலாம்’ என்றார்

Web Design by Srilanka Muslims Web Team