இத்தேர்தல் முதலீட்டாகவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாகவும் பயண்படுத்த முயற்சிக்கின்றனர்- JVP வேட்பாளர் பஹ்த் ஜுனைட் » Sri Lanka Muslim

இத்தேர்தல் முதலீட்டாகவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாகவும் பயண்படுத்த முயற்சிக்கின்றனர்- JVP வேட்பாளர் பஹ்த் ஜுனைட்

junaid

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கை அரசியலில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் நாட்டின் அனேகமான பிரதேசங்களில் சூடு பிடித்து கானப்படுவதுடன் சவால் மிகுத்த போட்டியாகவும் பார்க்கப்படுகிறது..

இத்தேர்தல் முறை வட்டாரத் தேர்தல் என்ற படியால் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புதிய முகங்கள் என பலபேர் களம் இறங்கியுள்ளனர்..

அவ்வாறு களம் இறங்கியுள்ளவர்களில் அதிகமானவர்கள் படிக்காதவர்கள், குற்றச் செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்தவர்கள், இன்னும் பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்கள் இத்தேர்தல் மூலம் சபைக்கு தெரிவாகி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காவே அதிக பிரயத்தனம் எடுக்கிறார்கள், அதே போல சில வேட்பாளர் இவ் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கும் , மக்களின் சேவைக்காக ஒதுகீடு செய்யப்படும் பணத்தை சுருட்டிக்கொள்வதற்கும் இத் தேர்தலை முதலீடாக பயண்படுத்துகின்றனர்..

இது தொடர்பில் ஒவ்வொரு கட்சிகளையும் அதனுடைய வேட்பாளர்களை வாக்காளர் நன்கு அவதானித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கும், மோசடிக்காரர்களுக்கும் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்த சுய நலமும் இல்லாமல் மக்களுக்காக சேவை செய்யும் நல்லொழுக்கம் உள்ள கல்வி அறிவு , மார்க்கப்பற்று உள்ள ஒருவருக்கு வாக்களித்து உங்கள் சபைகளுக்கு தெறிவுசெய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைக்கிறேன்..

Web Design by The Design Lanka