இந்தாண்டு பொதுத் தேர்தல்? அடுத்தாண்டு ஐனாதிபதித் தேர்தல்? - Sri Lanka Muslim

இந்தாண்டு பொதுத் தேர்தல்? அடுத்தாண்டு ஐனாதிபதித் தேர்தல்?

Contributors

இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் இலங்கையில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறும் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு பொது தேர்தல் ஒன்றும், 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் நடைபெறும் என்று  உயர் மட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களின் ஆதரவு குறித்து அவநம்பிக்கை கொண்டிருப்பதாகவும், தமக்கான ஆதரவு முற்றாக இல்லாது போவதற்கு முன்னதாக ஆட்சியை நீடித்துக் கொள்ளும் பொருட்டு விரைவாக தேர்தல்களை நடத்த முயற்சிப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜுன் மாதம் பெரும்பாலும் ஊவா மாகாண சபைத் தேர்தலும், அதன் பின்னர் பொது தேர்தல் ஒன்றும் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.(lr)

Web Design by Srilanka Muslims Web Team