.இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும் - றிப்கான் பதியுதீன் - Sri Lanka Muslim

.இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும் – றிப்கான் பதியுதீன்

Contributors

– அபூ அஸ்ஜத் –

இலங்கையில் இடம் பெறும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பொதுநலவாய மாநாட்டில் இந்திய தரைலவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் அவ்வாறு அவர்கள் கலந்து கொள்வார்கள் என்றால் அது இலங்கை தமிழர்களின் தமிழீழ கோறிக்கையினை நிராகரிக்கும் செயலென தமிழ்தேசிய கூட்டமைப்ப தெரிவித்துவருது ஒரு இனத்தின் எதிர்காலத்தை மட்டும் கவனத்தில் கொண்டு அவர்கள் செயற்படுவதாக அமையும் என்று வட மாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாடு தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறி்னார்.

மேலும் அவர் தகவல் அளிக்கையில் –

வடமாகாணம் என்பது யாழ்ப்பாணத்தை மட்டும் கொண்ட பிரதேசமல்ல இதில் கிளிநொச்சிஇமுல்லைத்தீவு வவுனியாஇமன்னார் ஆகிய மாவட்டங்களும் உள்ளடங்கியுள்ளது என்பதுடன் இங்கு தமிழ் முஸ்லிம்இசிங்கள மக்களும் வாழ்கின்றார்கள் என்பதை மறந்து எவராலும் பேச முடியாது.கடந்த கால யுத்தம்இஅதனை தொடர்ந்த முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் என்பன ஏற்படுத்திஅழிவுகளும் இழப்புக்களும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதைநாம் கூறியாகவேண்டும்.

வடமாகாண சபையின் சில் அங்கத்தவர்கள்இவடக்கில் தமிழ் மக்கள்மட்டுமே வாழ்வதாக அடையாளப்படுத்தி வருவதுடன்இஇந்திய நாட்டின்

ஆதரவினையும் இம்மக்களுக்காகவே பெரும் பிரயத்தனங்களை முன்னெடுத்துவருகின்றனர். வடக்கில் முஸ்லிம் இரண்டாவது சமூகமாக வாழ்ந்துவருகின்றனர்.இந்த மக்களின் வெளி்யேற்றம் தொடர்பில் இந்தயாவின் வகிப்பகம் எந்தளவு உள்ளது என்ற கேள்வியினை எழுப்ப வேண்டியுள்ளது.

வடக்கில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற வருகின்ற போது அதனை தடுத்துஇஒரு சகோதமர சிறுபான்மை சமூகத்தை வஞ்சிக்கும் நிலையினை இந்த அனுபவித்துவருகின்றனர். இந்தியாவின் பெரு நிலப்பரப்பில் முஸ்லிம்களும் சமமாக இருக்கின்றனர்.இந்த நிலையில் .

இலங்கை தொடர்பான நகர்வுகளை முன்னெடுக்கின்ற போது தமிழ் இந்தியாவின் தமிழ் அரசியல் வாதிகள் இலங்கை தமிழர் தொடர்பில் மட்டுமே பேசுகின்ற ஒருநிலை காணப்படுகின்றது.வடக்கி்ல் தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் பிரயோகிக்கப்படும் போது அதற்குள் இஸ்லாமியர்களும் இருக்கின்றார்கள் என்பதை மறைத்து தீர்மானங்களை அல்லது தீர்வுகளை எடுக்க முடியாது.இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் கவனத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க வேண்டும்.

வடமாகாகாணத்தில் பூர்வீகமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் இன்று ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.முஸ்லிம்கள் வாழ்ந்த சின்னங்கள் பதிவுகளாக இருக்கின்றன. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அதில் இஸ்லாமியர்களும் இருக்கின்றார்கள்.

மொழியால் ஒன்றுபட்ட இரு சமூகங்களுக்குமான எட்டப்பட வேண்டிய தீர்வுகள்இகாய்தல் உவர்தலின்றி பக்கசார்பின்றி எடுக்கப்பட வேண்டும் என்பதை மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன். இந்த பொதுநலவாய மாநாட்டில் அண்டைய நாடான இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித் கலந்து கொண்டுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் மக்களின் நலன் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை காணமுடிகின்றது.

இவ்வாறான நிலையில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் சபைகளின் பிரதி நிதிகளை வட மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான முன்னெடுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறிய றிப்கான் பதியுதீன்இவெகு விரைவில் இலங்கையில உள்ள இந்திய உணர் ஸ்தானிகரை சந்தித்து இது குறித்துஅறிவிக்கவுள்ளதாகவும் கூறினார்

Web Design by Srilanka Muslims Web Team