இந்தியாவில் ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா. - Sri Lanka Muslim

இந்தியாவில் ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.

Contributors

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று 25,320 ஆகவும், நேற்று முன்தினம் 24,882 ஆகவும் இருந்தது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு நேற்றைய 1,13,59,048 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,13,85,339 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 161 ஆகவும், நேற்று முன்தினம் 140 ஆகவும் இருந்தது. இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,58,607 ல் இருந்து 1,58,725 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,455 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,89,897 இல் இருந்து 1,10,07,352 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 2,99,08,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team