இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு, முஸ்லிம்களே காரணம் - புதிய சர்ச்சை » Sri Lanka Muslim

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு, முஸ்லிம்களே காரணம் – புதிய சர்ச்சை

india

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

/நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு, முஸ்லிம்களே காரணம் என்று பாஜக மூத்த தலைவரும், உன்னாவ் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சாக்ஷி மகராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தொகை உயர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. நாட்டில் மக்கள்தொகை பெருகுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நாட்டில் மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்திப்பதற்கு, 4 மனைவிகள், 40 குழந்தைகள் வைத்திருப்போர்களே காரணம். மக்கள்தொகை உயர்ந்திருப்பதற்கு, ஹிந்துகள் காரணம் கிடையாது.மக்கள்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான சட்டங்கள் தேவைப்படுகிறன. இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். நாட்டின் நலன்கருதி முடிவெடுக்க வேண்டும் என்றார் சாக்ஷி மகராஜ்.

ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில், யாரும் வாக்குக் கோரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி சாக்ஷி மகராஜின் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாக்ஷி மகராஜின் பேச்சுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. மித்தல் தெரிவித்தபோது, சாக்ஷி மகராஜுக்கு எதிராக தங்களது கட்சி விரைவில் புகார் அளிக்க இருப்பதாக குறிப்பிட்டார். ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்தபோது, பாஜகவுக்கும், சாக்ஷி மகராஜுக்கும் ஆகியோருக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாஜக, சாக்ஷி மகராஜ் விளக்கம்: சாக்ஷி மகராஜின் கருத்துகள், அவரது சொந்த கருத்துகள் என்று பாரதீய ஜனதா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “சாக்ஷி மகராஜ் கருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் சம்பந்தம் கிடையாது; அது அவருடைய சொந்தக் கருத்து’ என்றார். சாக்ஷி மகராஜும், தாம் பாரதீய ஜனதா கட்சியின் நிகழ்ச்சியில் இக்கருத்தை தெரிவிக்கவில்லையென்று விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் அறிக்கை கோருகிறது: இந்நிலையில், சாக்ஷி மகராஜின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அறிக்கை அளிக்கும்படி மீரட் மாவட்ட நிர்வாகத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேர்தல் கமிஷன், மீரட் நகரில் சாக்‌ஷி மஹராஜ் பேசிய கருத்துகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மீரட் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக சாக்ஷி மகராஜுக்கு எதிராக மீரட் நகர போலீஸார், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 298, 188, 295-ஏ, 153-பி ஆகிய பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

Web Design by The Design Lanka