இந்தியாவுக்கு ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம் திரும்ப பெறுவதே இலக்கு - அமைச்சர் கம்மன்பில விடாப்பிடி..! - Sri Lanka Muslim

இந்தியாவுக்கு ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம் திரும்ப பெறுவதே இலக்கு – அமைச்சர் கம்மன்பில விடாப்பிடி..!

Contributors

திருகோணமலை எண்ணெய் வளாகத்தில் உள்ள 100 புதிய எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில ( udaya gammanpila)தெரிவித்துள்ளார்.

1987 மற்றும் 2003 இல் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்த தாங்கிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடமிருந்து அவற்றை மீள பெறுவதே தனது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.

தாங்கிகளை இலங்கையிடம் மீண்டும் ஒப்படைக்க கடந்த ஒரு வருடமாக இந்தியாவிடம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க தானும் இந்திய வெளியுறவு அமைச்சரும் பணியாற்றி வருவதாகக் கூறி ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளதாகக் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், திருகோணமலைக்கு இந்திய வெளியுறவு செயலாளருடன் தான் ஹெலிகொப்டரில் பயணம் செய்jதாக தெரிவித்திருந்தாலும் இந்திய வெளியுறவுச் செயலடன் ஹெலிகொப்டரில் பயணம் செய்ததைத் தவிர என்னைச் சந்திக்க வாய்ப்பு கூட கேட்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.  

Web Design by Srilanka Muslims Web Team