இந்தியாவை நிர்கதியாக்கியுள்ள கொரோனா - Sri Lanka Muslim
Contributors

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,09,004 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 21,56,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 182,570 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 26,94,14,035 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது நாட்டில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, முன்களப் பணியாளர்கள் முதியவர்களுக்கு பெரும்பாலும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோரும் வரும் மே 1ஆம் திகதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.

வட மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team