இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை எதிர்பார்ப்பு..! - Sri Lanka Muslim

இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை எதிர்பார்ப்பு..!

Contributors

மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இந்தியா சரியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொழும்பு துறைமுக பிரச்சினை வணிக ரீதியிலான செயற்பாடாகும். மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை சம்பந்தப்பட்ட விடயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட நாள் நல்லுறவு தொடர்புபட்ட விடயமாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்குட்பட்ட அதிகார பகிர்வை இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில், தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடர்பில் தற்போது இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் 1976 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் இடம்பெற்றதாகும். அந்த நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் வெளிநாட்டு அமைச்சர் எமது படையினர் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார்.

துரதிஷ்டமான இந்த கருத்துக்களினால் பல நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டது. உண்மை நிலையை புரிந்துக்கொண்டு பல நாடுகள் செயற்பட்டதற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

L.T.T.E இனால் யாழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை கருத்தில் கொள்ளாமல் சில நாடுகள் செயற்பட்டன. L.T.T.E இனால் பிள்ளைகள் கடத்தப்பட்டமையால் பெற்றோர் துன்பத்தை அனுபவித்தனர்.

யுத்ததிற்கு பின்னர் யாழ் மக்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துக்கொண்டுள்ளனர். சில நாடுகள் டு.வு.வு.நு மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்காக ஆதரவை தெரிவிக்காததையிட்டு நாம் கவலை அடைகின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team