இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம் - Sri Lanka Muslim

இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்

Contributors

தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சாலை வழி எல்லைப் பகுதியான வாகா எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்கள்.
இந்தியாவின் பாரம்பரியமும், பிரசித்தியும் பெற்ற இனிப்பு வகைகளை எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. டெபி ஜோசப் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினார்.

அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையின் விங் கமாண்டர் முஹம்மது அஷீர் கான் பாகிஸ்தானின் பிரபல இனிப்பு வகைகைளை இந்திய வீரர்களுக்கு அளித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதையடுத்து அட்டாரி மற்றும் வாகா எல்லை பகுதியில் உள்ள இருநாடுகளின் கூட்டு சோதனை சாவடியை சுற்றியுள்ள இடங்களில் நேற்று சாந்தமான சூழல் நிலவியது.

Web Design by Srilanka Muslims Web Team