இந்தியா ,மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி - Sri Lanka Muslim

இந்தியா ,மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Contributors

இந்தியா ,மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

இன்று கான்பூரில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி மேற்கிந்திய தீவுகள் அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. பவல் 70 ரன்களும், சாமுவேல் 71 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி, தவானின் அதிரடி ஆட்டத்தால் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 266 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவான் 20 பவுண்ட்ரிகள் அடித்து 119 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 55 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ராம்பெல், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Web Design by Srilanka Muslims Web Team