இந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்..! - Sri Lanka Muslim

இந்திய உயர்ஸ்தானிகரை திடீரென சந்தித்த சம்பந்தன் குழுவினர்..!

Contributors

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பின் போது அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திக்கவிருந்தனர். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச் சந்திப்பினை ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகரை கூட்டமைப்பினர் சந்தித்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team